சாதாரணமாக ஆங்கில மெய்யெழுத்துக்களின் ஒலியுடன் தொடங்கும் சொற்களின் முன்பாக “த” என்றும், ஆங்கில உயிரெழுத்துக்களின் ஒலியுடன் தொடங்கும் சொற்களின் முன்பாக தி” என்றும் ஒலிக்க வேண்டும்.
இவ்வேறுப்பாட்டை கேட்டு அறிந்துக்கொள்ளலாம்.
|
The apple
The ball
The computer
The dog
The elephant
The fish
The great Tamil scholar
The higher education
The hill
The honest woman
The honorable man
The hours
The house
The independent newspaper
The jam bottle
The kinder garden
The laptop
The map
The national park
The one
The orange
The picture
The Quran
The restaurant
The student
The tournament
The ugly fruit
The umbrella
The United States
The university
The vote
The world map
The x files
The young ones
The zone
எந்தெந்த சொற்களின் முன்னால் "த" என ஒலிக்கப்படுகின்றது, எந்தெந்த சொற்களின் முன்னால் "தி" என்று ஒலிக்கப்படுகின்றது என்பதை கவனித்தீர்களா? (இல்லையெனில் மீண்டும் ஒரு முறை கேட்டுப்பாருங்கள்.)
மெய்யெழுத்துக்கள் (Consonants)
b c d f g h j k l m n p q r s t v w x y z = 21
உயிரெழுத்துக்கள் (Vowels)
a e i o u = 5
குறிப்பு:
சுட்டிடைச்சொல்லுக்கு முன்னால் வரும் சொல்லின் முதலெழுத்து மெய்யெழுத்தாக இருந்தால், சுட்டிடைச்சொல்லை "The - த" என்று ஒலிக்க வேண்டும் என்றும், உயிரெழுத்தாக இருந்தால் "The - தி" என்று ஒலிக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறு இல்லாமல் வேறுப்படும் இடங்களும் உள்ளன.
வேறுப்படுவதற்கான காரணம்?
மெய்யெழுத்து உயிரெழுத்து சொற்கள் என்று பாராமல், மெய்யொலி தரும் சொற்கள், உயிரொலி தரும் சொற்கள் என்றே பார்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
எடுத்துக்காட்டு:
மெய்யொலியுடன் தொடங்கும் சொற்களின் முன்னால் "The - த" வாக ஒலிக்கும்.
The ball
The computer
The dog
The fish
The great Tamil scholar
The higher education
The hill
The house
The jam bottle
The kinder garden
The laptop
The map
The national park
The one
The picture
The Quran
The restaurant
The student
The tournament
The united states
The university
The vote
The world map
The young ones
The zone
உயிரொலியுடன் தொடங்கும் சொற்களின் முன்னால் "The - தி" வாக ஒலிக்கும்.
The apple.
The elephant.
The honest woman.
The honorable man.
The hours.
The independent news paper.
The orange.
The ugly fruit.
The umbrella.
The x files.
0 comments:
Post a Comment