அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது ...Created By...
ngobikannan ....

நன்றி (Thanks)

இவற்றின் பயன்பாடு
விளக்கம்
--------------------------------------------------------------
சாதாரணமாக யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு சிறு உதவியைச் செய்தால் அல்லது அன்பாக "எப்படி சுகம்?" என வினவினால் "Thanks" எனலாம். இது ஒரு சம்பிரதாய வழக்கற்ற (Informal) முறைமையாகும்.

How are you?

Fine, thanks.
I'm fine, thanks.
I am very well, thank you.

How is your wife?
She's fine, thanks.
List of Thanks Phrases Words
யாரேனும் ஒருவர் அன்பான அணுகுமுறையுடன் ஏதேனும் ஒன்றை உங்களுக்கு வழங்க முற்பட்டால், அல்லது "வேண்டுமா" எனக் கேட்டால்; அதனை தாழ்மையுடன் ஏற்கும் விதமாக "நன்றி" சொல்லி ஏற்கலாம். (A polite way of accepting sth that sb has offered you.)

Would you like cup of coffee?
Usage thanks and thank you
Oh, thanks.
Thanks very much.
Thanks so much.
usage of thanks
ஏதேனும் ஒன்றை உங்களுக்கு "இன்னும் கொஞ்சம் வேண்டுமா?" என யேரேனும் ஒருவர் கேட்டால், அதனை வேண்டாம் என மறுத்துக் கூறுவதுடன், வேண்டுகோளுக்கான நன்றியையும் தாழ்மையுடன் தெரிவித்தல் ஆங்கில வழக்காகும். (A polite way of refusing sth that sb has offered you.)

Would you like some more?
No, thanks.

Do you want some more milk in your coffee?
No that's fine, thanks.
Polite ways to say thanks in aangilam
யாரேனும் ஒருவர் ஏதேனும் ஓர் உதவி அல்லது நன்மை செய்திருந்தால், அதற்கு நீங்கள் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க விரும்பினால், கீழுள்ளவாறு கூறலாம். (Used to show that you are very grateful to sb for sth they have done.)

Thanks a lot.
Thanks a bunch.
Thanks a million.
Thanks a billion.
Thanks a bundle.
English polite forms
Thanks a lot for your help.
Thanks a lot for all you’ve done.

சுருக்கமாக நன்றி தெரிவிக்கும் முறைமைகள் சிலவற்றைப் பார்க்கவும்.

Thank you.
Thank you, Mr. Obama.
Thank you, Sir John.
Thank you, Good question.

யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு உதவியை அல்லது அறிவுரையை அவராகவே வழங்க எத்தனிக்கும் போது, அதனை "என்னால் செய்துக்கொள்ள முடியும், கேட்டலுக்கு நன்றி" என்பதுப்போன்றும் கூறலாம். (To tell sb firmly that you do not need their help or advice.)

Shall I do that?
Can I help you?

I can do it myself, thank you.

ஒருவரது உதவிக்கு தாழ்மையாக (Polite way) நன்றிக் கூற விரும்பினால்:

"Thank you kindly." எனலாம்.

ஒருவர் செய்த உதவிக்கு அல்லது நன்மைக்கு "எவ்வாறு உங்களுக்கு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!" என்பதுப்போல் நன்றி உணர்வை மிகைப்படுத்திக் காட்டும் விதமாகக் கூறும் வழக்கமும் ஆங்கிலத்தில் உள்ளது.

I don't know how to thank you.
I don't know how to thank you for your help.
I don't know how to thank you for your great service.

"உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" என்பதுப் போன்றும் தமது நன்றி உணர்வை வெளிப்படுத்திப் பேசலாம்.

I can't thank you enough.
I can't thank you enough for your kindness.
I can't thank you enough for your kind consideration.

0 comments:

Post a Comment